அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்திருக்கும் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பி.எஸ்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தராவிட்டால் பழனிசாமி அரசு கவிழ்ந்திருக்கும். ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கவிழ்ந்து விடக்கூடாது என்பதால் ஆதரித்தேன். நான் நினைத்திருந்தால் அப்போதே இபிஎஸ் அரசு முடிந்திருக்கும். மீண்டும் எடப்பாடி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்காக பல பாடங்களை கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும்.
பாஜகவுடன் கூட்டணியா? என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.என்றார்.
மேலும் அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்ல என்று ஒன்றிய அரசே சொல்லிவிட்டது.என்றார்.