மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுகவின் 52 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , திமுக போல கட்சியை வைத்து பொழப்பு நடத்துகிற குடும்பம் இல்லை. அதிமுக என்று பேசியுள்ளார்.
புரட்சித்தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை போல் ரத்தம் வேர்வை சிந்தி உழைத்த பணத்தை வைத்து கூட்டம் நடத்துபவர்கள் தான் அதிமுக தொண்டர்கள். அதிமுகவை அழிக்க ஸ்டாலின் இல்லை உதயநிதி, இன்பநிதி இல்லை, ஏன் உங்க அப்பா கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை, நீ எல்லாம் எம்மாத்திரம் ஆறுமுகம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.
அதிமுகாவை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை நம்பாமல் கெட்டவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகம்.நீ எத்தனை வழக்குகள் போட்டாலும் அதிமுக முன்பு அது நிக்காது. பேரிடர் காலங்களில் கஜானாவே காலியாகி திர்ந்தது. ஆனால் அது எல்லாம் தவுடுபடியாக்கியவர் எடப்பாடியார். மக்கள் மனம் கலங்காமல் ஆட்சி நடத்தி வந்தார். அடிப்படை தொண்டனாக இருந்து படிப்படியாக கட்சியில் முன்னேறி அம்மாவின் அன்பை பெற்று தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் பெற்று எடப்பாடியார் நல்லாட்சி நடத்தி வந்தார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவை நினைவாக்கிய தமிழன் நம் பழனிச்சாமி. புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கருணாநிதி குடும்பத்தை பற்றி அன்றே பாடியுள்ளார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று பாடி தெரிவித்தார். இன்று ஆட்சி நடத்தி வரும் திமுக அனைத்திலும் கலக்சன் கரப்சன் செய்து வருகிறது.
மத்திய அரசுகள் எத்தனை ஐடி ரெய்டு நடத்தினாலும் போங்கடா நாங்கள் பார்க்காத திகார் ஜெயிலா 2 ஜீயா நாங்கள் செய்யாத ஊழலா என மார்தட்டிக் கொள்பவர்கள் தான் திமுகவினர். சினேகாவை கட்டிப்பிடிப்பார் நயன்தாராவுடன் டூயட் பாடுவார் பைக்கில் சந்தானத்தை பின்னால் அமர வைத்து நகைச்சுவை செய்வார். கலைஞருடைய பேரன் என்கிற ஒரே காரணத்தால் இன்று அவரை விளையாட்டு துறை அமைச்சராக ஆக்கியுள்ளனர்.
அவர் நடித்த படங்களில் நாம் இது போன்ற கருத்துக்களை எதிர்பார்க்க முடியுமா. அப்பாவும் மகனும் இருவரும் மாறிமாறி புகழ்ந்து கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலைவாசி, அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு மக்களை வஞ்சித்து வருகிறது. திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி. அவர்கள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் கருணாநிதி குடும்பத்தினர் தான்.

அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமே இல்லை கடைக்கோடி தொண்டனையும் தலைவனாக்குவது தான் அதிமுக. தெர்மாகோல் என்று எனக்கு பெயர் வைத்து ஓட்டு ஓட்டு என்று ஓட்டுகிறார்கள். புரட்சித்தலைவர் காவிரி நீருக்காக சென்றார். நான் வைகை நீருக்காக சென்றேன். என் மதுரை மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், அதற்கு தீர்வு காண அதிகாரிகள் கூறுகிறார்களே என்று சென்றேன். புடிச்சிட்டாங்களே புடிச்சிட்டாங்களே டேக் இட் ஈசி பாலிசி, நமது பாலிசி தனி பாலிசி என நகைச்சுவையாக கூறினார்
பத்து ரூபாய் ஒரு மதுபானத்திற்கு என எழுதாத ஒரு சட்டமாக ஒரு திட்டத்தை உருவாக்கிய செந்தில் பாலாஜி கணக்கு போடுவதில் வல்லவனாக இருந்த பாலாஜி எப்படி இருந்த பாலாஜி ? இப்படி ஆகிவிட்டார், என திரைப்பட நகைச்சுவையை சுட்டிக் காட்டி, குடிகாரர்கள் வாயில் விழுந்தால் விளங்குவாயா அதனால்தான் உனக்கு ஜாமினே கிடைக்கவில்லை என செந்தில் பாலாஜி குறித்து கிண்டலாக தொடர்ந்து மேடையில் பேசினார். விஞ்ஞான ரீதியாக ஊழல் பண்ண கட்சி திமுக.
எத்தனை ரெய்டு வந்தாலும் சூனா பானா விடாத விடாத என்று சொல்லி வடிவேலு போல மீசையை முறுக்கி விட்டு தோரனையாக நிற்பது போல இருக்கின்றனர். தற்போது பள்ளி வளாகங்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் தின்பாண்டகளுக்கு பதிலாக போதை மிட்டாய் விற்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று சகோதரி கனிமொழி சொன்னார். ஆனால் தமிழகத்தில் இன்று மதுவால் நிறைய இளம் விதவைகள் இருக்கக்கூடிய ஒரு நிலை இருந்து வருகிறது.
.
திமுக என்று வீட்டிற்கு செல்கிறதோ அன்றைக்கு தான் தமிழகத்திற்கு உண்மையான விடியல். திமுக என்ன தான் தங்கம் தங்கமாக கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது. தேர்தல் நேரத்தில் யார் யாரோ வருவார்கள். ஆசை வார்த்தை கூறுவார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடியார் போல யாரும் இருக்க மாட்டார்கள். ஆறுமுகம் கொண்ட ஒரு முகமாக இருக்கக்கூடிய பழனிச்சாமி தான் எங்களுடைய தலைவர்.அவர் சொல்பவருக்கு தான் வாக்களிப்போம்.

பாராட்டு
நாங்கள் பிறருக்கு வாக்களிக்க மாட்டோம். நீ கொடுப்பதை கொடு வாங்கிக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் இரட்டலைக்கு தான். இரட்டை இலையை விரலிலேயே சின்னத்தைக் கொண்டு வெற்றி பெற ஒரு கட்சிதான் அதிமுக. 52ம் ஆண்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவில் வீட்டுக்கு அனுப்பவேண்டும். எடப்பாடியார் சொல்லுகின்ற வேட்பாளருக்கு அதிமுகவின் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என சூழுரை ஏற்போம்.
என்றவாறு மேடையில் இருந்து கீழே அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்து இவ்வளவு நேரமும் பொறுமையாக காத்திருந்த உங்களுக்கு நன்றி என்றும், உங்களது பாதம் தொட்டு நன்றி தெரிவிக்கின்றேன், என தனக்கே உரித்த பாணியில் நன்றி தெரிவித்து தனது பேச்சை நிறைவு செய்தார்.தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் ஆளுயர மாலையும் வாழும் வேலும் நினைவு பரிசாக வழங்கினர்.