கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை. காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்றிய இளைஞர்கள் வீடியோ சமுக வலைதளங்களில் வைரல்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் குலசேகரம், திருவட்டார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் வெளுத்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி முதல் கனமழையும், சாரல் மழையும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் பெய்த கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது, ஆறுகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளிலும், இதே போல நிலப்பரப்புகளான குலசேகரம், சித்திரங்கோடு, திருவட்டார், ஆறூர் அருமனை, ஆறுகாணிமார்த்தாண்டம் ஆகிய உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கன்னியகுமாரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியதால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளபெருக்கு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று சுமார் மதியத்திற்கு மேல் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் குமாரகோவில் அருகே தனியார் (நூருல் இஸ்லாம்) பல்கலைக்கழகம் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வந்த நிலையில், தனியார் கல்லூரி வளாகத்திற்குள் காட்டாறு தண்ணீர் உள்ளே புகுந்தது. இதில் தனியார் கல்லூரியில் பணி செய்யும் மூதாட்டி ஒருவர் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி கொண்டு காப்பாற்றுங்கள் என்று கூச்சலிடவே வகுப்பறையில் இருந்த முதுநிலை, இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்கள் டெல்பின் மூதாட்டியின் சத்தத்தை கேட்டு ஓடி வந்து, அந்த மூதாட்டியை காட்டாறு வெள்ளத்தில் இருந்து பத்திரமாக காப்பாற்றினர்.
இதை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.