மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் : வாய்க்கால் அருகில் சிதிலம் அடைந்த நிலையில் சடலமாக மீட்பு.!

1 Min Read
  • தஞ்சையில் காணாமல் போனதாக மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் வாய்க்கால் அருகில் சிதிலம் அடைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை கீழவாசல் ஆடக்கார தெருவில் வசித்து வருபவர் தர்மராஜ், இவரது மகன் சின்னராசு (24). மீன் வியாபாரம் செய்து வந்தார்.

- Advertisement -
Ad imageAd image

கடந்த சனிக்கிழமை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்று உள்ளார். வெளியில் சென்ற சின்னராசு வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு அருகில் வாய்க்கால் கரையோரம் புதர் மண்டி உள்ள இடத்தில் நிர்வாண கோலத்தில் தலைக்குப்புற ஆண் சடலம் சிதிலம் அடைந்த நிலையில் கிடப்பதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/murasoli-m-p-with-the-officials-regarding-the-ongoing-works-at-tanjore-railway-station-researched/

இதனை அறிந்த சின்னராசு உறவினர்கள் சந்தேகம் அடைந்து சடலம் கிடந்த இடத்திற்கு சென்று தலைக்குப்புற கிடந்த உடலை புரட்டி பார்த்த போது சின்னராசு என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சின்னராசு உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போனதாக 3 நாட்களாக தேடப்பட்டு வந்த இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review