குரங்கிற்கு உயிர் கொடுத்த இளைஞர்..!

2 Min Read
குரங்கிற்கு உயிர் கொடுத்த இளைஞர்

பேர்ணாம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கிற்கு – தன் மூச்சு காற்றின் மூலம் உயிர் கொடுத்த இளைஞர்.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நாம் செல்லும் வழியில் விபத்துகள் ஏற்படுவது இயல்பு அது போன்ற விபத்துகளில் மனிதர்கள் அடிபட்டு கிடந்தாலே பலரும் கண்டு கொள்வதில்லை.இதில் விலங்குகள் அடிபட்டால் யார் தான் கண்டு கொள்வார்.அப்படி ஒரு மனிதநேயம் மிக்க இளைஞர் இருக்கிறார். வேலுர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு இளைஞர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றினார்.

குரங்கிற்கு உயிர் கொடுத்த இளைஞர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி மலைப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபு மற்றும் கலா ராணி ஆவார்.இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் நிதீஷ் குமார் (வயது 19). வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் நேற்று முன்தினம் மாலை அதிக குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் இந்த பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகம்.

அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கம் அடைந்தது. பலரும் குரங்கு இறந்து விட்டது என்றே நினைத்துவிட்டார்கள். இதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

குரங்கிற்கு உயிர் கொடுத்த இளைஞர்

அப்போது அதே பகுதியை சேர்ந்த நிதிஷ் குமார் என்ற வாலிபர் பாய்ந்து வந்து, அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்தும் அதன் மார்பு மீது மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது போலவே இரண்டு கைகளை வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றியுள்ளார்.

இதனையடுத்து குரங்கு அங்கிருந்து சென்றது. மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர் நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த இளைஞருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இதனை நிதிஷ் குமாரின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review