மோடியை வீழ்த்த இந்தியா…..

0
107
இந்தியா கூட்டணி

தலையங்கம்…

தொடங்கியது நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள்…

தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக பிஜேபி ஆட்சி அமைத்து வரும் நிலையில் இந்த முறை எப்படியாவது பிஜேபியை ஓரம் பெற்று விட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேலைகளை தொடங்கி விட்டனர். அதற்காக முதலில் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

26 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன கூட்டத்தில் கூட்டணிகு என தனியாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.I.N.D.I.A  இந்த பெயரில் தான் இந்த அணி இனிமேல்  இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேற்கு வங்கா முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்களை ஒன்றிணைக்கும் பணியை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தொடங்கினார். சுமார் 38 கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தினை டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது பிஜேபி. அந்த கூட்டணிக்குள்ளும் பிரதானமாக பங்கேற்ற தலைவர்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் முக்கியத்துவம். காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியிலும் ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.இரண்டு கூட்டணிகளும் தமிழகத்தை தான் நம்பி இருக்கின்ற என்பது இதிலிருந்தே தெரிகிறது. தமிழ்நாட்டிற்க்கென ஒரு தனி முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு கூட்டணிகளும் ஒருவரை ஒருவர் ஊழல் கட்சிகள் என்று அறிவித்துக் கொண்டு இயங்குகின்றன. மக்களின் பார்வை என்னவாக இருக்கும் இந்த நேரத்தில் என்றால் நாங்கள் ஊழல் இல்லாத கட்சி என்று எந்த கட்சியும் அறிவிக்க முன்வரவில்லை என்றுதான் இருக்கிறது. பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம், விலைவாசி உயர்வு ஒரு பக்கம், இதுவெல்லாம் மக்களை சாதாரணமாக இயங்க விடாமல் தடுக்கின்ற இந்த வேளையில் அவர்களை மீண்டும் வாக்கு வங்கி இயந்திரங்களாக மாற்ற துடிக்கின்றன அரசியல் கட்சிகள்.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என்கிற அடிப்படைத் தேவைகளுக்கான எந்த செயல்பாட்டிலும் இயங்காமல் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்காக வியூகம் வகிக்கிற வேலைகள் தான் நடந்தேறி வருகிறது. குறைந்தபட்ச கொள்கையாவது இந்த கூட்டணி கட்சிகளுக்குள் இருக்க வேண்டிய அவசியத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு முறை வெற்றி பெற்று விட்டால் வாக்களித்த வாக்காளர்களுக்கு எந்த பதிலும் சொல்ல தேவையில்லை என்கிற மனநிலையிலே தான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றது.

இந்த முறை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் அது அவர்களை நிறைய சிந்திக்க செய்துள்ளது அதனால் கூட்டணிகள் எப்படி இருந்தாலும் மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நம்முடைய கருத்தும், அதே தான்.

ஜோதி நரசிம்மன்

ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here