கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ள ஏராளம் ஏரி சோழர்கள் ஆட்சி காலத்தில் இளவரசர் ராஜாதித்த சோழனால் தனது தந்தை முதலாம் பராந்தக சோழனின் புனைப் பெயரான வீரநாராயணன் பெயரில் இந்த ஏரியை கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் விவசாய பயன்பாட்டுக்காக ஏற்படுத்தினார்.11 கிலோமீட்டர் நீளத்தில், 4 கிலோமீட்டர் அகலத்தில், 44 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
ஏரியில் தண்ணீர் வரத்து காலங்களில் கடல் போல காட்சியளிக்கும். ஏரிக்கு தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு மூலம் தண்ணீர் வரத்துக்கு திறக்கப்படும். இது தவிர அருகே உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் கருவாட்டு ஓடை, தென்னங்குழி ஓடை, செங்கால் ஓடை போன்ற வடிகால் ஓடைகளின் மூலம் ஏரிக்கு தண்ணீர் வரும். ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் 1.46 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்கலாம்.கடல் மட்டத்திலிருந்து 47.5 அடிகளாகவும், 15.60 அடிகள் ஆழத்துடன் உள்ள இந்த ஏரி மூலம் கிழக்கு கரையில் உள்ள 28 பாசன மதகுகள் மற்றும் மேற்கு கரையில் 6 பாசன மதவுகள் மூலமாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

மேலும் ஏரியில் இருந்து ஆண்டொன்றிற்கு நேரடி பாசனமாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்களும் மறைமுகமாக கிட்டத்தட்ட 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் நீர்வரத்து பெறுகின்றன. சென்னையின் ஒட்டுமொத்த குடிநீரில் மூன்றில் 1 பங்கு வீராணம் ஏரியின் தண்ணீர் என்பது குறிப்பிடத்தக்கது.இது தவிர உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம், வெற்றிலை விவசாயம் மற்றும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையான நிலத்தடி நீர் மட்டம் உயர்வு போன்ற வகைகளுக்கு ஆதாரமாக விளங்கி வருகின்றது.
லால்பேட்டை அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடை, பூதம் கூடி அருகே உள்ள புதிய வீராணம் அணைகளில் இருந்து வீரனும் ஏரியின் உபரி நீர் திறந்து கடலுக்கு விடப்படும்.நடப்பாண்டு ஜூன் மாதம் இறுதியில் ஏரிக்கு நீர் வடவாறு மூலம் வரத்து இருந்தது. ஒரு சில வாரங்களில் வடவாறுக்கு தண்ணீர் மூடப்பட்டதால் ஏரிக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது.தற்போது மழைக்காலம் தொடங்கியதை ஒட்டி குடியிருப்பு பகுதியில் பெய்த மழையால் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிக அளவில் வந்தது. நேற்றைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 46 அடிகளாக இருந்தது.

இதை அடுத்து ஏரிக்கு வடவாறு ஓடைகளில் இருந்து தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறையினர் வடவாறு ஓடையில் இருந்து வரும் நீர்வரத்தை நிறுத்தி ஏரி நீர்மட்டத்தை 46 அடிகளில் வைத்துள்ளனர்.இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில் வடக்கிழக்கு பருவமழை அதிகரிக்கும் பட்சத்தில் ஏறிக்கு வரும் நீர்வரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும்.மேலும் உபரிநீர் புதிய வீரணம் அணையின் மூலம் வெள்ளாற்றுக்கும், வெள்ளியங்கால் ஓடை மூலம் கான்சாகிப் வாய்க்காலுக்கும் திறக்கப்படும்.
பாசனம் பொருத்தவரை சம்பா விவசாயத்துக்கு போதுமான அளவு தண்ணீர் கையிருப்பு உள்ளது.குறிப்பாக குறுவை சாகுபடியும் சமாளிக்கலாம். தற்போது விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.