- மாதா கோயிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தில் நீர்நிலை வாய்க்காலில் கட்டப்பட்ட மாதா ஆலயத்தை இடிக்க நீதிமன்ற உத்தரவின் படி இடிக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 21நாள் கால அவகாசம் வழங்கிய அதிகாரிகள் . மீண்டும் கால அவகாசம் முடிவுற்ற நிலையில் இன்று இடிக்க அதிகாரிகள் முற்படும்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தில் ராகவன் வாய்க்காலின் கிளை திருநாவலூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் மீது கடலூர்-சித்தூர் சாலை அருகே வழித்துணை மாதா கோவில் கட்டி கிராமம் பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை சமர்ப்பித்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது அதன் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் ராஜ்குமார், திருவெண்ணெய்நல்லூர் நீர்வளத்துறையினர் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வருவாய்த் துறையினர் கால அவகாசம் முடிந்த நிலையில் கோயில் அகற்ற இன்று வந்திருந்தனர் கோவிலை இடிக்க கூடாது என்று கிராம மக்கள் கோயில் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.