டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட Ocean gate titan நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த ஐந்து தொழிலதிபர்களும், இறந்துவிட்டதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக , இந்த விபத்து நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த துயர சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள டைட்டானிக் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் , இந்த ஆழ்கடல் பயணத்தை ஏற்பாடு செய்த Ocean gate expedition நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் .

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு (1912-ம் ஆண்டு) இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரிலிருந்து டைட்டானிக் என்று சொகுசு கப்பல் 2 ஆயிரத்து 224 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி புறப்பட்டது.
துரதிஷ்டவசமாக இந்த சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருக்கும் போது ராட்சத பனிப்பாறையில் மோதி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. இந்த கோர கப்பல் விபத்தில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் இன்று வரை இந்த விபத்து மிக மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படுகின்றது .
இந்த சோக சம்பவம் நடந்து சுமார் 110 வருடங்கள் ஆன நிலையில் , கடந்த 1985 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன .
அப்போதுமுதல் அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை நீர்மூழ்கி கப்பல் உதவியுடன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்ககளையம் , இந்த கப்பல் மூழ்கியதற்கான காரணத்தையும் அறிய பல கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இது ஒரு புறம் இருக்க சமீபகாலமாக சில தனியார் நீர்மூழ்கி கப்பல்கள் சுற்றுலா பயணிகளை நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் மூழ்கியுள்ள டைட்டனிக் கப்பலின் சிதைந்த பக்கங்களை சுற்றிக்காட்டும் பார்க்க சில கப்பல் நிறுவனங்கள்பணியிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வகையில் கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்துடைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அட்லாண்டிக் கடல் அடியில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட 5 சுற்றுலா பயணிகளுடன் கடலில் இறங்கியது.
இதில் இங்கிலாந்து நாட்டின் பணக்காரர்களின் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங் (57), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), இவரது மகன் மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரி பால் ஹெண்ட்ரி(76), oceangate கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகிய 5 பேர் பயணித்தனர்.
ஜூன் 18 அன்று, நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையிலிருந்து பயணத்தை தொடங்கிய Oceangate titan நீர்மூழ்கிக் கப்பலை oceangate கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) கடலுக்குள் இயக்கி உள்ளார் , கடலுக்குள் மூழ்கிய இரண்டு மணி நேரத்திலே நீர்முழ்கி கப்பல் தனது தகவல் தொடர்புகளை இழந்தது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பயணிகளும் இறந்ததாக அமெரிக்க கடற்படை கடலோர காவல்படை அதிகாரப்பூர்வமாக வியாழன் அன்ற அறிவித்தது, இருப்பினும் அவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை .
இந்த சூழ்நிலையில் Oceangate titan நீர்முழ்கி கப்பல் முறையான பதிவு இல்லாமலும் , பாதுகாப்பு விதிமுறைகளுக்குப் பொறுப்பான சர்வதேச நிறுவனங்களுடன் இணங்காமல் இயங்கிவந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது .
இந்த தனியார் சுற்றுலா நீர்முழ்கி கப்பல் நிறுவனத்திற்கு எதிராக கவனக்குறைவாக செயல்பட்டு ஐந்து நபர்கள் அதுவும் உலகின் முக்கிய தொழிலதிபர்களின் இறப்பிற்கு காரணமாக இருந்ததாகு வழக்கு பதிவு செய்ய சாத்தியம் இருந்த போதிலும் , இவர்கள் பயணத்திற்கு முன்பு அந்த நிறுவனத்திடம் கையெழுத்திட உடன்படிக்கை ஒப்பந்தத்தினால் வழக்கு நீர்த்து போக வாய்ப்புள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் .
இது தொடர்பாக டைட்டானிக் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் விமர்சிக்கும் , டைட்டானிக் படத்தை உருவாக்குவதற்காக இதுவரை நான் 30 கும் மேற்பட்ட தடவை , டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்ககளை பார்வையிட ஆழ்கடலில் பயணம் மேற்கொண்டுளேன் , நானாக இருந்தால் கண்டிப்பாக இந்த நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து இருக்க மாட்டேன் , அந்த நிறுவனத்திற்கு அவர்களின் நீர்முழ்கி கண்டிப்பாக சர்வதேச தர சான்றிதழ் சோதனையில் தேர்ச்சி பெற மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்” இதனால் தான் Ocean gate titan யை எந்த சோதனைக்கும் உட்படுத்தவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார் .

இயக்குனர் ஜெமேசின் இந்த விமர்சனத்துக்கு பிபிசி வானொலி மூலம் நேரடியாக பதில் அளித்துள்ள Oceangate expedition நிறுவந்த்தின் இணை நிறுவனர் சோன்லீன் Oceangate titan நீர்முழ்கிக் கப்பல் 14 வருட முயற்சியால் உயர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட திட்டமாகும், மேலும் இது மிகவும் வலிமையானது மற்றும் கடந்த சில ஆண்டுகளில் டைட்டானிக் வெற்றிகரமான அறிவியல் வெளிப்பாடுகளுக்கு வழிவகுத்தது.
விஷயங்களை எவ்வாறு செய்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை எவ்வாறு வடிவமைப்பது, எவ்வாறு பொறியியல் செய்வது, எவ்வாறு உருவாக்குவது, எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் பார்வைகள் உள்ளன.
ஆனால் எனக்கும் மற்ற நிபுணர்களுக்கும் உண்மையாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், நீர்முழுக்கிகள் வடிவமைப்பு, பொறியியல், கட்டிடம், சோதனை அல்லது டைவிங் ஆகியவற்றில் தற்போது விமர்சனம் செய்யும் யாரும் ஈடுபடவில்லை.
Oceangate titan நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானம் மற்றும் தர சோதனைத் திட்டத்தில் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஈடுபடவில்லை , எனவே அவரது விமர்சனத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக பதில் அளித்துள்ளார் .