மாற்றுத்திறனாளி சாமி கும்பிட வந்த பக்தரின் காரில் இருந்த காற்றை பிடுங்கி விட்ட அறங்காவலர்..!

2 Min Read
அறங்காவலர் சாமிநாதன்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலிற்கு மாற்றுத்திறனாளி அவரது மகன்களுடன் சாமி கும்பிட வந்த பக்தரின் காரில் இருந்த காற்றை அறங்காவலர் பிடுங்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவல். காவல் நிலையத்தில் புகார்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசீலன். தொழிலதிபரான இவரது மகன்கள் கனிஷ்கர் வயது (27) மற்றும் குகன் வயது (10) ஆகியோர் இருவருமே நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் என்ற நிலையில், அவர்களை காரில் அழைத்து கொண்டு இன்று சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது குடும்பத்தார்களுடன் காரில் வந்துள்ளார்.

தொழிலதிபரான இவரது மகன்களால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் என்ற சூழ்நிலையில், காரை கோவில் வாசலின் அருகே நிறுத்தி விட்டு, தனது மனைவி துணையுடன் இருவரையும் தொலில் தூக்கி கொண்டு சாமி கும்பிடுவதற்காக கோவிலில் உள்ளே சென்றுள்ளார்.

அறங்காவலர் சாமிநாதன் என்பவர், காற்றை பிடுங்கி விடும் காட்சி

பின்னர் தொழிலதிபரான குணசீலன் அவரது குடும்பதினர்கள் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு, அங்கிருந்து கோவிலிருந்து வாசலுக்கு வரும் போது, அங்கு வந்த கோவில் அறங்காவலர் சாமிநாதன் என்பவர், அவர்களிடம் கோவில் வாசலில் எப்படி காரை நிறுத்தி விட்டு சென்றீர்கள்? என்று கேட்டு, வாக்குவாதம் செய்த நிலையில், குணசீலன் கூறுகையில் தனது மகன்கள் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் என கூறியும்,அதனை சிறிது கூட பொருட்படுத்தாமல், அறங்காவலர் சாமிநாதன் குணசிலனின் கார் முன்பக்க சக்கரத்தில் இருந்து காற்றை பிடுங்கி விட்டுள்ளார்.

தொழிலதிபரான குணசீலன் சாமிநாதனிடம் எவ்வளவு எடுத்துக் கூறியும், அதனை சிறிது கூட பொருட்படுத்தாமல் கோவில் அறங்காவலர் சாமிநாதன் என்பவர், காற்றை பிடுங்கி விடும் காட்சியை கோவிலுக்கு வந்த நபர்கள் அவர்களுடைய செல்போனில் எடுத்து, பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி உள்ளனர்.

அறங்காவலர் சாமிநாதன் என்பவர், காற்றை பிடுங்கி விடும் காட்சி

இது குறித்து குணசீலன் அருகில் உள்ள குன்றக்குடி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற குன்றக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களிடம் சாமிநாதன் செய்த செயல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அப்போது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review