தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் தொகுதியில் மலை கிராமத்தில் தற்காலிக வீட்டில் குடியிருக்கும் பழங்குடியினருக்கான கட்டப்படும் வீடு தரமற்ற முறையில் பலத்த மழைக்கு தாங்காத அளவிற்கு கம்பி என்றால் கட்டிடத்திற்கு தேவையா என்ற முறையில் ஊராட்சி அதிகாரிகள் ஆதரவுடன் மனசாட்சி இல்லாமல் வீடு கட்டி வரும் ஒப்பந்ததாரர். யாராச்சும் நடவடிக்கை எடுத்து தரமான முறையில் வீடை கட்டி தருவார்களா என்று ஏக்கத்துடன் உள்ள பழங்குடியின மக்கள்.
திண்டுக்கல் மாவட்டம் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பன்றிமலை மற்றும் ஆடலூர் ஊராட்சிகள் உள்ளன. கொடைக்கானலில் கீழ் மலை பகுதியான இப்பகுதியில் அதிக அளவில் அடர்ந்த வனத்துக்குள் தற்போது வரை ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பன்றி மலை ஊராட்சியில் தலைவராக தேவி உள்ளார். இப்பகுதியில் அடர்ந்த காடுகளுக்குள் ஆதிவாசி பழங்குடியினர் பல்வேறு குடும்பங்களாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வீடுகள் இல்லாமல் இருந்த 16 பழங்குடியின குடும்பத்தை சேர்ந்தவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பன்றிமலை ஆடலூர் செல்லும் சாலை பகுதியில் இடம் வழங்கப்பட்டு தற்காலிக குடிசைகள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் உத்தரவின் பெயரில் பழங்குடியின ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அழகேசன், பெருமாள், செல்வி ,சேகர், கருப்புசாமி உள்ளிட்ட ஆறு குடும்பத்தினருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்க்கு சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் வீடு கட்டுவதற்காக ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களால் தனியாக வீடு கட்ட முடியாது என்பதால் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் நாகேந்திரன் என்பவரிடம் ஆறு வீடுகளையும் கட்டுவதற்கு அனுமதி வழங்கினர். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முடியும் பொழுது பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு ஒன்றியத்தின் மூலம் பணம் அனுப்பப்பட்டு அந்த பணத்தை வாங்கி ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் வீடு பாறையின் மேல் வீடு கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. காட்டுப்பகுதியில் உள்ள கற்களை பழங்குடியின மக்கள் சேகரித்த கற்களை கொண்டு வீட்டின் பேஸ்மட்டம் என்று சொல்லும் வீட்டின் தரைப்பகுதியில் கட்டிடம் கட்டி பேஸ்மட்டம் அமைக்கப்பட்டது. அதேபோல் பாறையில் எந்த கம்பியும் கட்டிடத்திற்கு செலுத்தாமல் பேஸ்மட்டம் அமைக்கப்பட்டது. மேலும் கட்டிடத்தில் எந்த ஒரு கம்பியும். காங்கிரீட்டும் பயன்படுத்தாமல் ஹாலோ பிளாக் கற்களால் மூலம் வீடு கட்டப்பட்டு தற்போது மூன்று வீடுகள் முடிந்து விட்டன.
ஒரு லட்ச ரூபாயில் வீட்டை ஒப்பந்ததாரர் ஆதிவாசி மக்களை பயன்படுத்தி வீட்டைகட்டி விட்டார். ஆனால் வீட்டில் எப்பொழுதும் பயத்துடனே இருக்க வேண்டும். வீட்டின் எந்த பகுதியிலும் கான்கிரீட் மற்றும் கம்பிகள் பயன்படுத்தாமல் பாறையில் வீட்டை கட்டி முடித்துவிட்டனர். வீட்டின் மேற்கூரைக்கு மட்டும் 8 MM அளவு சிறிய கம்மியை பயன்படுத்தி, மேற்கூரை அமைத்துள்ளதால் தற்போது மேற்கூரை தொட்டி போல் ஆகி விட்டது.
வீட்டை பயன்படுத்தும் ஆதிவாசி மக்களான பழனிச்சாமி கூறும்பொழுது, அனைத்தும் எங்களை வைத்தே வேலைகள் பார்த்தார். மேலும் நாங்கள் தான் கற்கள் சேகரித்து கொடுத்து பேஸ் மட்டத்தை முடித்தோம். மேலும் வீட்டின் பணிகள் முடியும் வரை நாங்கள் அனைவரும் எந்த ஒரு சம்பளமும் வாங்காமல் வேலை செய்தோம்.
வீட்டின் தரமான எந்த பணியும் செய்யவில்லை, கேள்வி கேட்டால் உங்களுக்கு இதுவே அதிகம் வேணுமானால் நீங்கள் பணம் கொடுங்கள் என்று எங்களிடம் கேட்டு ஒப்பந்ததாரர் நாகேந்திரன் மிரட்டுகிறார். இந்த வீடானது பலத்தமழை பெய்தால் கண்டிப்பாக இடிந்து விழும் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எந்த நோக்கத்திற்காக வீடு கட்டப்பட்டது. அந்த நோக்கம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. வீட்டிற்கு அடியில் தண்ணீர் செல்கிறது. எங்களது வாழ்வு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே ஊரகத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் நேரில் பார்வையிட வேண்டும்.
எங்களுக்கு வீடு கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஒப்பந்ததாரர் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களது சொந்த வீடு என்றால் இப்படி கட்டுவார்களா? என மனசாட்சி இல்லாமல் எங்களுக்கு வீடு கட்டி தருகிறார்கள் என கண்ணீர் மல்க ஆதிவாசி மக்கள் கூறினார்.

மேலும் ஒப்பந்தகாரர் நாகேந்திரன் எங்களுக்கு தண்ணீர் வழங்குவதாக குழாய் கொண்டு வந்ததாக சொல்லி அதிலும் மிகப்பெரிய மோசடி செய்து பல லட்ச ரூபாய் ஊராட்சியின் மூலம் பணத்தை வாங்கி விட்டார். ஆனால் எங்களுக்கு இதுவரை தண்ணீர் வழங்கவில்லை. ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் ஒப்பந்ததாரர் உள்ள நாகேந்திரன் பல்வேறு பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இவருக்கு ஆதரவாக உள்ள ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.