ஒரத்தநாடு அருகே இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி …

The News Collect
1 Min Read
  • ஒரத்தநாடு அருகே இறந்தவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவலம். பாலம் கட்டித் தர மக்கள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒத்தநாடு மேலயூர் யாதவர் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாப்பான் ஓடை ஆற்று கால்வாய் கடந்து தான் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

அந்த பகுதியை சேர்ந்த குருசாமி 60 என்பவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீர் சிரமத்துடன் சுடுகாட்டுக்கு தூக்கிச் செல்கின்றனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழைக்காலங்களில் பாப்பன் ஆற்றில் தண்ணீர் செல்வதால் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து சிரமம் இருந்து வருவதாகவும் இதனால் ஆற்றில் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://www.thenewscollect.com/action-conducted-by-the-police-7-people-including-college-students-were-arrested-for-storing-ganja-and-drugs-in-the-students-dormitory-in-coimbatore/

Share This Article
Leave a review