தமிழகத்தில் கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. பொறியியல் தொழில்கல்வியை காட்டிலும் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் போன்றவைகளுக்காக கலை,அறிவியல் பாடங்களில் மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் விழுப்புரம், திண்டிவனம், திருவெண்ணைநல்லூர், உள்ளிட்ட அரசு கல்லூரிகளில் கலை அறிவியல் பாடங்களுக்கான செயற்கை விண்ணப்பங்கள் பல மடங்கு குவிந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2000 இடங்களுக்கு சுமார் 20,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட் ஆப் மதிப்பெண் இன சுழற்சி சிறப்பு ஒதுக்கீடு பிரிவு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேற்று கல்லூரியில் எஞ்சி உள்ள இடங்களுக்கு இறுதி கட்ட மானவர் சேர்க்கை நடந்தது.

அதில் சுமார் 150 இடங்களுக்கு 500 பேருக்கு குவிந்தன. தொடர்ந்து கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமையில் இளம் அறிவியல் பிரிவுக்கு 220 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும், பி .ஏ, பி. காம், உள்ளிட்ட பாடங்களுக்கு 200 வரை கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கும் உள்ளே அழைக்கப்பட்டனர். அதிலும் அதிக அளவு மாணவர்கள் வந்ததால் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்த கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்திருந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்லூரி முன்பாக குவிந்தனர்.

இதனிடையே கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி முதல்வர் சிவகுமார் அறைக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமப்புறத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. அரசு உயர் கல்வி படிக்க வேண்டும் என்கிறது. ஆனால் நீங்கள் இடம் தர மறுக்கிறீர்கள் என்று வாங்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர், கல்லூரி இயக்குனர் அலுவலகம் ஒதுக்கியே இடங்களுக்கு கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தவித முறைகேடுகளுக்கு இடம் இன்றி மாணவர் சேர்க்கை நடக்கிறது. கூடுதல் இடங்கள் குறித்து இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவித்து, அவர்கள் அனுமதித்தால் மீண்டும் மாணவர் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் நடக்கும். நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிவடைந்து விட்டதாகவும் இனிமேல் இயக்குநர் அலுவலகம் அனுமதித்தால் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்று கூறி மாணவர்களை போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றியதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.