பள்ளி மேல்மாடி வரண்டாவில் மயங்கிச் சரிந்த உயிரிழந்த மாணவன்..!

2 Min Read

பள்ளி முடிந்து வகுப்பறையில் இருந்து, வீட்டிற்குச் செல்ல புத்தகம் பையுடன் வெளியே வந்த அரசுப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் மேல்மாடி வரண்டாவில் மயங்கிச் சரிந்த சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவரது மகன் மாரிமுத்து (வயது 14). பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நன்றாக படிக்கும் மாணவன். தீபாவளி விடுமுறை முடிந்து செவ்வாய்கிழமை பள்ளிக்கு வந்த போது பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மகிழ்ச்சியோடு இருந்தனர் மாணவர்கள்.

பள்ளி மேல்மாடி வரண்டாவில் மயங்கிச் சரிந்த மாணவன்

மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் புத்தகப் பையோடு வீட்டிற்கு கிளம்பும் போது மாணவன் மாரிமுத்துவும் தனது நண்பனோடு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து படியில் இறங்கும் முன்பே திடீரென மயங்கி கீழே சாய முன்னால் சென்ற மாணவன் வேகமாக வந்து பார்த்து விட்டு ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை தூக்கிச் சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மேல்மாடி வரண்டாவில் மயங்கிச் சரிந்த உயிரிழந்த மாணவன்

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக ஆவுடையார்கோயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற போலீசார் மாணவனின் உறவினர்கள் முன்னிலையில் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தனர். சக மாணவனோடு புத்தகப் பையோடு வரும் மாரிமுத்து திடீரென கீழே சாயும் சிசிடிவி வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.

ஆவுடையார்கோயில் போலிசார் விசாராணை

இந்தப் பள்ளியில் படித்த ஒரு சரவணன் என்ற மாணவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான். இப்போது ஒரு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து மாணவர்கள் உயிரிழப்பு ஏற்படுவதால் பொதுமக்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தொடரும் மாணவர்கள் இறப்பு சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a review