- தஞ்சையை அடுத்துள்ள ஒக்கநாடு மேலையூரில் மாநில அளவிலான கபடி போட்டி, இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு முதல் பரிசு 55 ஆயிரம் ரூபாய்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடை சுற்றியுள்ள பகுதிகள் கபடி விளையாட்டு வீரர்கள் நிறைந்த பகுதி இந்நிலையில் இன்று இரவு மின்னொளியில் 10 மணிக்கு ஒக்கநாடு மேலையூரில் வாணவேடிக்கைகளுடன் துவங்கிய மாநில அளவிலான கபடி போட்டியில் தஞ்சை, திருவாரூர் நாகை புதுக்கோட்டைதிருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் 500 க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியை தஞ்சை எம்.பி முரசொலி துவக்கிவைத்தார்.
விருவிருப்பாக ஆண்கள் அணி வீரர்களும், பெண்கள் அணி வீரர்களும் விளையாடி வருகின்றனர். முதலிடம் பிடிக்கும் அணிக்கு 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.