விளையாட்டு வீரர்களின் உணவு , உறைவிட செலவிற்கான உச்சவரம்பை 66% உயர்த்தியது விளையாட்டு அமைச்சகம்

1 Min Read
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டுக்கள் அமைச்சகம் 66% உயர்த்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான  அமைச்சக உதவித்திட்டத்தின் கீழ், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

திருத்தப்பட்ட புதிய விதியின்படி, அங்கீரிக்கப்பட்டப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்கள் நாள் ஒன்றுக்கு  250 அமெரிக்க டாலர் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஏற்கனவே வழங்கப்பட்ட 150 டாலரிலிருந்து இது 66% அதிகமாகும்.

உணவு, உறைவிடம், உள்ளூர் போக்குவரத்து, சில நேரங்களில் நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த செலவு உச்சவரம்பு இருக்கும். ஏற்கனவே 2015 நவம்பரில்  உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு தற்போது  எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் உச்சவரம்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review