கள்ளகாதலுடன் சென்ற தாயை கண்டுபிடித்து வெட்டிய மகன்..!

2 Min Read
மாரிஸ்வாரி

கள்ளக்காதலால் கணவன் மற்றும் மகனை பிரிந்து சென்ற தாயை கண்டுபிடித்து சரமாரியாக வெட்டிய மகன் மனைவி உடன் இருந்த கள்ளக்காதலனுக்கும் அவரது தம்பிக்கும் வெட்டு. அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரிஸ்வாரி வயது (45) என்பவர், இவருக்கு திருமணம் ஆகி புஷ்பராஜ் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் என்பவரை காதலித்துள்ளார். இருவரின் நெருக்கம் அதிகமாகவே காணப்பட்டது.பின்னர் இருவருக்குள்ளும் நெருக்கமான உறவு ஏற்பட்டது.

போலிசார் விசாரணை

கணவர் மற்றும் மகனை பிரிந்து ரமேஷ் உடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே.என் புரம் பகுதிக்கு வந்து குடியேறி உள்ளார். இவர்களுடன் ரமேஷின் தம்பி கணேஷ் உடன் இருந்துள்ளார். தொடர்ந்து இங்கேயே தள்ளுவண்டி கடையில் வடை, போண்டா,பஜ்ஜி ஆகியவற்றை விற்று,குடும்ப பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாரீஸ் வரியின் முதல் கணவரின் மகன் புஸ்பராஜ் தனது தாய் இருக்கும் இடத்தை தேடி அறிந்து வந்து தனது தாய் மற்றும் கள்ளகாதலன் ரமேஷ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் புஷ்பராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு கணேஷ், ரமேஷ் மற்றும் தனது தாய் மாரிஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

பல்லடம் காவல் நிலயம்

இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ரமேஷ் மற்றும் கணேஷ் இருவரும் புஸ்பராஜை தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் படுகாயங்கள் ஏற்பட்ட நான்கு பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காயம் பெரிதாக உள்ள காரணத்தினால் நீங்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறினார்.பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review