- புழல் சிறையில் உணவின் தரம் குறித்து புகார் அளித்ததற்காக விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சிறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோபாலபிள்ளை விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில் விசாரணை கைதியாக தனது உறவினர் புஷ்பராஜ் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிறையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புஷ்பராஜ் புகார் அளித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் புஷ்ப்ராஜ்ஜை தனிமை சிறையில் அடைத்ததோடு ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-high-court-has-ordered-the-imprisonment-of-former-bjp-executive-anjali-who-was-arrested-in-the-armstrong-murder-case/
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி வாதிட்டார்.இதனையடுத்து, மனு குறித்து புழல் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.