காதலிடம் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற பூசாரி..!

2 Min Read

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பசுவராஜ் வயது 38. இவர் கல் உடைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி வயது 28. கடந்த சில மாதங்களாக பசுவராஜ் பெங்களூரு சென்று கல் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். தினமும் தனது மனைவியிடம் ஃபோனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த 15ஆம் தேதியில் இருந்து மனைவியை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளார். போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்துள்ளது. அதனால் பசுவராஜ் தாரமங்கலம் வந்து வீட்டில் பார்த்துள்ளார். அப்போது மனைவி செல்வியை காணவில்லை. இது பற்றிய தாரமங்கலம் போலீசில் பசுவராஜ் புகார் கொடுத்தார்.

- Advertisement -
Ad imageAd image

விசாரணையில் கடந்த 15ஆம் தேதி சேலம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு குறி கேட்க சென்றதை போலீசார் கண்டறிந்தனர். கோவில் பகுதிக்கு நேற்று மாலை வந்து விசாரித்தனர். அதில் கோவிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வாயில் நுரை தள்ளி விஷம் குடித்து இருந்திருந்தது போல் இருந்தது. மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையே காணவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு குறி கேட்க செல்வி வந்துள்ளார்.

பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில்

அப்போது அங்குள்ள பூசாரி குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் 30,000 பணத்தை பூசாரி குமாரிடமிருந்து செல்வி வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு பெங்களூரில் இருந்து கணவர் மூலம் குறைந்த விலைக்கு தங்க காசு வாங்கி இருப்பதாக சொல்லியுள்ளார். ஆனால் தங்க காசு வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி கோவிலுக்கு வரும்படி செல்வியை குமார் அழைத்துள்ளார் .அதன்படியே அவர் வந்திருக்கிறார்.

தாரமங்கலம் காவல் நிலையம்

அந்த இடத்தில் தனது ஆசைக்கு இணக்கும் படி கூறி இருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தனது பணத்தை திரும்பத் தராமல் உறவுக்கு வர மறுத்ததால் குளிர்பானத்தில் சைனைட் கலந்து கொடுத்து செல்வி கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார், என விசாரணை தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a review