ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை தக்காளி கிலோ 150 முதல் 160 ரூபாய்க்கு விற்பனை.

2 Min Read
தக்காளி

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தக்காளி விலையில் அதிக வித்தியாசம் இருந்து வருகிறது. ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு கடந்த வாரம் விற்பனையான தக்காளி நாளுக்கு நாள் விலையேற்றம் கண்டு வருகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை இன்று 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலையேற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள் பொதுமக்கள். கனமழையும் கிடையாது அதிக வெயிலும் இல்லை இருந்தாலும் தக்காளி உற்பத்தியில் ஏன் இந்த சுனக்கம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விவசாயிகள் தக்காளி உற்பத்தி செய்வதில் அக்கறை செலுத்தாமல் விட்டு விட்டார்களா என்ற காரணங்கள் எதுவும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறது அரசும்.

இன்று ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை மார்க்கெட்டில் 1800 ரூபாய் வரை ஏலம் போனது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான ஏத்தகோவில், வண்டியூர், மரிகுண்டு, கானாவிலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு அவ்வப்போது  காற்றுடன் மழை பெய்ததால் தக்காளி பழங்கள் நிறைய செடியிலேயே அழுகி வரத்து அடியோடு சரிந்துள்ளது.

இதன் காரணமாக ஆண்டிப்பட்டி யானை மார்க்கெட், சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் தக்காளி வரத்து அடியோடு சரிந்துள்ளது.
இதனால் தக்காளி விலை தொடர்ந்து 5நாட்களாகவே அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் இன்று தக்காளியின் விலை மார்க்கெட்டில் உச்சத்தை தொட்டது.

இதனால் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை அதிகபட்சமாக 1800 ரூபாய் வரை ஏலம் போகிறது
இதனால் கிலோ 140 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கும் வியாபாரிகள், சில்லரை, தள்ளுவண்டி வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளி 150  முதல் 160 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தக்காளி விலை அதிக ஏற்றம் கண்டுள்ளது.

அரசு தக்காளிப் பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும் விலையேற்றம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு இதனை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
இன்னும் ஓரிரு மாதங்களில் பருவ மழை தொடங்கும் நிலை உள்ளதால் அதற்குள்ளாகவே தக்காளி விலை உயர்வை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

Share This Article
Leave a review