ரவுடி வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை..!

2 Min Read
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை

விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் அருகில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் சாராயம் கடத்தப்படுவதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளின் அட்டகாசம் தலை தூக்கி உள்ள நிலையில் அதன் பாதிப்பு அருகில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த கூலிப்படையினர் விழுப்புரம் மாவட்டம் வானூர் கோட்டகுப்பம் ஆரோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவி கொலை, கொலை முயற்சி, வழிப்பறி குற்ற செயல்களில் ஈடுபட்டு புதுச்சேரிக்கு தப்பி சென்று விடுகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை

இதுபோன்ற குற்ற சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கு பாதிப்பு குறித்தும், கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் புதுச்சேரி மாநில போலீஸ் அதிகாரிகளும் கலந்தாலோசித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ரவுடியின் செயல்களில் ஈடுபட்டவர்கள் கொலை, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டார்கள், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், என குற்றப்பதிவேடு பட்டியலில் உள்ள 533 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களது வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியில் நேற்று மாவட்ட போலீசார் சூப்பிரண்டு கசாங்சாய் உத்தரவின் பெயரில் விழுப்புரம் போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் அணிவகுத்து நின்றனர். விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியான பள்ளி தென்னல், சிறுவந்தாடு, பெரும்பாக்கம், வானூர், மொரட்டாண்டி, பிள்ளை சாவடி, ஆரோவில் கோட்டக்குப்பம், குயிலாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை

அப்போது ரவுடிகளின் தற்போதைய நிலவரம் என்ன, அவர்கள் எங்கு இருக்கிறார்கள், ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா அவர்களின் வீட்டில் ஆயுதங்கள் ஏதேனும் பதிக்க வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

Share This Article
Leave a review