செங்கல்பட்டு அருகே ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டி படுகொலை 10 மணி நேரத்தில் 5 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை

2 Min Read
கொலை செய்யப்பட்ட மனோகரன்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (33). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று  இரவு 10-மணியளவில் தனது நண்பரை காண இருசக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 5-மர்ம நபர்கள் மனோகரனை அறிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
பாலன் அபினேஷ்

தொடர்ந்து இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு மனோகரன் தப்பி ஓடி சென்று பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு வீட்டில் பின்பக்கமாக சென்று பதுங்கி உள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அஜித்குமார்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளியின் தடயங்களையும் சேகரித்து சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணி தலைமையில் இரண்டு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 7 பேர் கொண்ட குழு இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26), பூபாலன் (26), அபினேஷ் (24), அருண் (28), சண்முகசுந்தரம் (26) ஆகிய ஐந்து பேரை மகேந்திராசிட்டி பகுதியில்  கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய பயங்கர ஆயுதங்கள் கத்தி மற்றும் அரிவாள் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொலையுண்ட மனோகர்

முதல் கட்ட விசாரணையில்  கூடுவாஞ்சேரியில்  போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வரும் சங்கீதாவின் தம்பியான கைதான குற்றவாளி அஜித்குமார் கூறுகையில், தனது அக்கா சங்கீதாவுக்கும், மனோகரனுக்கும் கள்ள தொடர்பு இருப்தாக எங்கள் பகுதியில் பேசி வருகின்றனர். எனது நண்பர்களும் தொடர்ந்து என்னிடம் தெரிவித்தனர். இதனால் மனோகரை கொலை செய்ய திட்டமிட்டு நண்பர்களுடன் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார், மற்றொரு குற்றவாளி பூபாலன் கூறுகையில் நான்கு நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது நண்பர்கள் மத்தியில் மனோகரன் என்னை அடித்துவிட்டார் அந்த அவமானம் தாங்க முடியாமல் நண்பர்களுடன் சேர்ந்து மனோகரை கொலை செய்ததாக கூறியுள்ளார், மற்றோரு குற்றவாளி அருண் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனோகரன் என்னை கொலை செய்ய திட்டமிட்டார் அதனால் நண்பர்களுடன் சேர்ந்து மனோகரனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

கொண்டமங்களம், தர்காஸ், அனுமந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது கஞ்சா பயன்படுத்துவதும் மனோகரன் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்து வந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பேசப்படுகின்றது.

மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை சம்பவம் நடந்து பத்து மணி நேரத்தில் ஐந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.

Share This Article
Leave a review