தங்கர்பச்சான் வெற்றியை கனித்த கிளி பறந்து போனது.

2 Min Read
தங்கர்பச்சான்

கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்..

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர் இதனிடையே வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: “கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.

பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவித்திருந்தார்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக பிரபல சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த கிளி ஜோதிடர், தன்னிடம் ஜோதிடம் பார்க்கும் படி கேட்டுக்கொண்டார். அதற்கு சம்மதித்த தங்கர்பச்சான் அங்கு அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்தார். இதில் கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறிய கிளி ஜோசியக்காரர்,தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த வனத்துறை,கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் எனவே சட்டப்படி இது போன்ற பறவைகளை அடைத்து வைத்து வித்தை காட்டுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவே வனத்துறை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் கிளியை வனத்துறையினர் பறக்க விட்டனர்.

Share This Article
Leave a review