கிராம மக்களுக்கு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த ஊராட்சி மன்றத் தலைவர்

0
42
உணவு பரிமாறும் ஊராட்சி மன்ற தலைவர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் ஊராட்சி மன்ற தலைவர் தனது கிராமத்தில்  நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி புரிபவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆசூர் கிராமத்தில் ஞானசேகரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கபட்டு பணி செய்து வருகிறார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்தவர்.இந்த கிராமத்தில் அந்த மக்களுக்கான பல்வேறு சேவைகளை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.இந்த கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் குளம், வாய்க்கால், ஏரி போன்றவைகல் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பாக பணி புரியவேண்டும் பணியின் போது அவர்களுக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாதென்று அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 8 கிடா வெட்டி மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு தலைவாழை இலை போட்டு பிரியானி விருந்து வைத்துள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவராக தன் கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் வேலையுடன் அவர்களுக்கு கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த மக்களுக்கு உணவு பரிமாறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here