கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணியின் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

அதில் இந்தியா கூட்டணி திமுக சார்பில் கோவை நாடாளுமன்றத்தில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா புறநகர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து திமுக சின்னத்தில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை வெற்றி பெற செய்ய வேண்டுமென வாக்குகள் சேகரித்தார்.


அடுப்பே பற்ற வைக்கவில்லை தம்பி – அதுக்குள்ள சுடுதுன்னா எப்படி.? அண்ணாமலைக்கு டி.ஆர்.பி. ராஜா நக்கலான பதில்

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று கவுண்டம்பாளையம் தொகுதிக்கான தேர்தல் ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கோவையில் ரெண்டு டிகிரி வெயில் அதிகரித்திருக்கிறது.

கோயமுத்தூரில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளார்கள், ஊரை சூடேற்றியது தான் மிச்சம். குளுமையாக அமைதியாக இருக்கக்கூடிய ஊரை இன்னைக்கு ரெண்டு டிகிரி, மூணு டிகிரி வெப்பநிலையை ஏற்றி இருக்கிறார்கள். ஒரு டூவிலரில் இந்த ஊரில் போக முடியுமா என கேள்வி எழுப்பினர்.

அண்ணாமலை

இதற்கு பதிலளிக்கும் வகையில் சூலூரில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சரும், கோவை நாடாளுமன்ற பொறுப்பாளருமான டி.ஆர்.பி ராஜா பேசுகையில்;- பாஜக பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது, அப்பவும் ஒண்ணும் செய்யவில்லை. அதிமுக எதுவும் செய்யவில்லை.

அப்ப, எந்த முகத்தை வைத்து கொண்டு தமிழக மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியும். அதனால் தான் 3 டிகிரி 5 டிகிரி கதையெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. இவர்களுக்கெல்லாம் தேர்தல் சூடு தாங்காது.

அடுப்பே பற்ற வைக்கவில்லை தம்பி – அதுக்குள்ள சுடுதுன்னா எப்படி.? அண்ணாமலைக்கு டி.ஆர்.பி. ராஜா நக்கலான பதில்..!

தேர்தல் சூடு என்றால் என்னவென்று தெரியாது. இன்னும் அடுப்பே பற்ற வைக்கவில்லை தம்பி. அதுக்குள்ள சூடுது, சூடுதுன்னு சொன்னா என்ன பன்றது, புரிந்தவர்களுக்கு புரியும் என நக்கலாக பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here