தொழிற்பேட்டை காவல் நிலைய செக்டார் காவலர்களை தாக்கிய வடமாநில கும்பல்..!

2 Min Read

அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட மோதலை 100 அவசர அழைப்பை விசாரிக்க சென்ற தொழிற்பேட்டை காவல் நிலைய செக்டார் காவலர்களை தாக்கிய வடமாநில கும்பலை சேர்ந்த 28 பேர் விடிய விடிய அதிரடியாக கைது.போலிசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் இரு கும்பலாக மோதிகொண்டனர். இது போன்ற விவகாரத்தில் தொழிற்சாலையின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 100 அவசர அழைப்பை விசாரிக்கச் சென்ற காவலர்கள் ரகுபதி மற்றும் சக காவலர்கள் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வட மாநிலத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம்

மேலும் விசாரிக்க சென்ற காவலர்களை வடமாநிலத்தவர்களால் தாக்கப்பட்டு தாக்கி அடுத்தடுத்து காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைத்து வட தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 28 வடமாநில தொழிலாளர்களும் அடையாளம் காணப்பட்டு செங்குன்றம் காவல்துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் மற்றும் 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறியதாவது கடந்த 23ஆம் தேதி இரவு ஓர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 33 பேரை கைது செய்துள்ளோம். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய எந்த செயலானாலும் காவல்துறை நடைவடிக்கை எடுக்கும்.மேலும் இதுபோல் அசம்பாவிதம் இனி நடைபெறாமல் இருக்க நிறுவனங்களுடன் காவல் துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிசிசிடி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவே இரண்டு நாட்கள் கால தாமதம் ஆனது.

இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்களை தொழிலாளர் நலத்துறையினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர் என தெரிவித்தார்

 

Share This Article
Leave a review