இந்தியா கூட்டணியின் புதிய ‘பிஆர்ஓ’ நரேந்திர மோடி அவர்கள்., மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

0
106
நரேந்திர மோடி

இந்தியாவை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.., “இந்தியா (I.N.D.I.A) கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கம். இந்திய யூனியனை பாதுகாக்க உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தியா கூட்டணி பாட்னாவில் சந்தித்த போது வெறும் 19 கட்சிகள் தான் இணைந்திருந்தன. பிறகு பெங்களூருவில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கூட்டணி 26 ஆக அதிகரித்தது.  

ஸ்டாலின்

தற்போது மும்பை சந்திப்பில் இது 28 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்தியா கூட்டணி உறுதியாக உருமாறி வருவதை அனைத்து செய்தியாளர்களும் நன்றாகவே அறிவர்.” “நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” “சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் புகார் பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருந்து வருகிறார்.  

நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி பிரபலம் அடைந்து வரும் நிலையில், மோடி அரசு சமீப காலங்களில் அவ பெயர் அதிகரித்து வருகிறது. நமது கூட்டணி வெறும் தேர்தல் வெற்றியை சார்ந்தது இல்லை. இது நாட்டை காப்பாற்றுவதற்கும், நாட்டில் உள்ள 1.4 பில்லியன் குடிமக்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.” “நமது கூட்டணிக்கு மகாராஷ்டிரா மாநில மக்கள் தங்களது வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவை தெரிவித்து உள்ளனர். இந்த சந்திப்பு திருப்திகரமான ஒன்றாக இருந்ததோடு, திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து இருக்கிறது. ஆதரவும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here