Villupuram : மீண்டும் குளம் போல் காட்சி அளிக்கும் புதிய பேருந்து நிலையம் , பயணிகள் அவதி .!

1 Min Read
  • விழுப்புரத்தில் கனமழை புதிய பேருந்து நிலையம் மீண்டும் குளம் போல காட்சி அளிக்க தொடங்கியது. பேருந்துகள் வந்து செல்வதில் சிக்கல். அவதிக்கு உள்ளாகும் பயணிகள். புதிதாக மின் மோட்டார் அமைக்கப்பட்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்த நிலையில் மீண்டும் மழை நீர் தேங்கியது.

வட கிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்தது இந்த நிலையில் நேற்று வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆய்வு மேற்கொண்டு மழை நீர் தேங்காத வண்ணம் தண்ணீரை வெளியேற்றும் புதிய மின் மோட்டார் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அதை தொடர்ந்து இன்று காலையிலிருந்து தொடர்ந்து விளம்பர பெய்து வரும் நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மீண்டும் குளம் போல காட்சியளிக்க தோன்றியுள்ளது. இதனால் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tanjore-mayor-sun-said-that-all-kinds-of-precautionary-measures-have-been-taken-by-the-thanjavur-corporation-to-face-the-northeast-monsoon-ramanathan-said/

புதிதாக அமைக்கப்பட்ட மின்மோட்டார் என்ன ஆனது என்கிற கேள்வி எழுகிற நிலையில் மின் மோட்டார் இயங்குவதாக தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள். அதுமட்டுமில்லாமல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளே உள்ள தார் சாலைகள் முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது உடனடியாக இவற்றை சரி செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Share This Article
Leave a review