வசூல் சாதனை படைத்த ” லியோ ” திரைப்படம்..!

2 Min Read
தளபதி விஜய்

லியோ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகளவில் 540 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் உலகளவில் 525 கோடிகள் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது.

- Advertisement -
Ad imageAd image

2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 19ல் உலகம் முழுவதும் வெளியான லியோ திரைப்படம், தற்போது உலகளவில் வெற்றிநடை போடுகிறது. இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிருக்கிறார், லலித் குமார் தனது ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். கேமரா மேன் மனோஜ் இப்படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்திருகிறார்.

நடிகர் விஜய்

இப்படத்தில் நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், நடிகர் வாசுதேவ் மேனன், நடிகர் வையாபுரி, நடிகர் சாண்டி, நடிகர் மிஸ்கின், நடிகர் சஞ்சய் டட், நடிகை ப்ரியா ஆனந்த், என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் 148.5 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்திய சினிமாவில் எந்த படமும் படைக்காத பிரமாண்ட சாதனையை லியோ படத்தின் மூலம் நடிகர் விஜய் புதிய சாதனையை படைத்துள்ளார். தமிழ் சினிமாவின் இந்த சாதனை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. லியோ திரைப்படம் 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 19ல் (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில்,

2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 22 வரை முதல் வார இறுதியில் மட்டும் இப்படம் 400 கோடிகள் வசூல் செய்துள்ளாக தகவல்கள் வெளியாகி பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் கொண்டாடப்படுகிறது. 4 தினங்களில் 400 கோடிகள் வசூல் செய்த படமாக நடிகர் விஜய்-ன் லியோ படத்தின் சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 வரை உலகளவில் இப்படம் 540 கோடிகள் வசூல் செய்துள்ளாக தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ” பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி” போன்ற வசனங்களால் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Share This Article
Leave a review