- பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.8.54 கோடி செலவில் புதிய தங்கத்தேர் அமைச்சர் பெருமக்கள் திரு ஆக்காந்தி மற்றும் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.கஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.8.54 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை தொடங்கி வைத்தனர்
2022-2023 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது பெரியபாளையம் அருள்மிகு பவாளி அம்மன் திருக்கோயிலுக்குப் புதிய தங்கத்தேர் ரூ. 8 கோடி செலவில் உருவாக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் 29.10 2023 அன்று புதிய தங்கத்தேருக்கான பணிகள் தொடங்கப்பட்டு
11 கிலோ தங்கம்,
27,540, கிலோ வெள்ளி, 370 கிலோ செப்பு பயன்படுத்தப்பட்டு ரூ 8. 54 கோடி செலவில் புதிய
தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம்
11.5 அடி அகலம் 5 அடி நீளம் 6.5 அடியாகும்.
இத்திருக்கோயிலுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை இன்று மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஆர் காந்தி மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி. ஜெ கோவிந்தராஜன், ஆ கிருஷ்ணசாமி.
துரை சந்திரசேகர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி என் ஸ்ரீதர். கூடுதல் ஆணையர் டாக்டர் இராசுகுமார் திருவ ள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஆ இராஜ்குமார் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு உமாமகேஸ்வரி இணை ஆணையர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் திரு அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்..