ஹெல்ப் கேட்ட அமைச்சர்.! நோ சொன்ன டெல்லி புள்ளி.! என்ன நடக் …

Jothi Narasimman
3 Min Read
பொன்முடி

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் களுக்கு எதிராக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான்
ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள். இவர் ஆர்பிஐ ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார். சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை இவர் வாங்கியதாக கூறப்படுகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளதாம். இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு வந்த சோதனை! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இதில் அமைச்சராக அப்போது இருந்து பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொன்முடி

இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடந்ததற்கான பல ஆதார ஆவணங்களை கைப்பற்றியது அமலாக்கத்துறை. விசாரணைக்கு பொன்முடியும் கௌதமசிகாம ணியும் ஒத்துழைத்ததால் செந்தில் பாலாஜியை போல, அவர்கள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் பொன்முடிக்கு நெருக்கமான ஒருவர் மூலம் டெல்லிக்கு தூது அனுப்பப்பட்டு உள்ளதாம். இந்த வழக்கில் உதவி செய்வதற்காக டெல்லியில் தூது அனுப்பப்பட்டு உள்ளதாம். பொன்முடிக்கு நெருக்கமான அந்த நபரும், டெல்லியை சேர்ந்த டாப் தலைக்கு நெருக்கமான ஒருவரும் நெருங்கிய நண்பர்களாம்.

இவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அதை வைத்து டெல்லியின் உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் டெல்லி இருக்கிறதாம். ஆனால் டெல்லியோ இந்த விஷயத்தில் எல்லாம் நட்பு ரீதியாக உதவ முடியாது என்று கை விரித்து விட்டதாம். இதில் எல்லாம் நாங்கள் தலையிட முடியாது. ஆட்சி, அரசியல் இதை பற்றி நாங்கள் பேச மாட்டோம். வேறு விஷயம் இருந்தால் சொல்லுங்கள் என்று கை விரித்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர் பொன்முடியிடமும், அவரது மகன் கௌதம சிகாமணியிடமும் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, ரெய்டு குறித்தும் சம்மந்தப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியது குறித்தும் முதல் கட்ட ரிப்போர்ட்டை மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் பொன்முடி மற்றும் சிகாமணி ஆகிய இருவருக்குமான ஆடிட்டரிடம் அமலாக்கத்துறை இந்த வாரத்தில் விசாரணை நடத்தவிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் இந்தோனேசியா மற்றும் அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ள விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பொன்முடியும்,
கௌதமசிகாமணியும் சில பதில்களை தெரிவித்திருக்கிறார்கள்.

கௌதமசிகாமணி

அதனை ஆடிட்டரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறது. ஆடிட்டரின் பதில், இவர்களின் பதில்களோடு தான் ஒத்து போகும். ஆனால், அமலாக்கத்துறையிடமிருக்கும் சில ஆவன ஆதாரங்கங்களில் உள்ள விபரங்களோடு இவர்களின் பதில்களும் விளக்கங்கங்களும் முரண்பட்டால்,
முதலில் சிகாமணியை கைது செய்ய தீர்மானித்திருக்கிறார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள். ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டது தவறு அல்ல என்று நிரூபிக்க பொன்முடியிடமோ, சிகாமணியிடமோ ஆடிட்டரிடமோ எந்த ஆவண ஆதாரமும் இல்லை என்பதால் கைது நடவடிக்கையில் இருந்து இவர்கள் தப்பிக்க முடியாது என்கிறார்கள்.

சிகாமணி எம்.பி.யாக இருப்பதால் அவரை கைது செய்கிற முடிவை எடுக்கும் சமயத்தில், கைது செய்வதற்கு முன்பாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு தெரியப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாம்.
காரணம், தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதி கைது செய்யப்பட் டாலும் செந்தில்பாலாஜி விவகாரத்தில் நடந்தது போல நடந்துவிடக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு மத்திய நிதியமைச்சகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

Share This Article
Leave a review