கோவையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் வெடித்ததில் ஏற்பட்ட அதிகபட்ச மாசுஅளவு 197 ஆக இருப்பது தெரியவந்துள்ளது.
தீபாவளி முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு அளவிடுவதற்காக, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் காற்று மாசு குறித்து தொடர் அளவீடு செய்யும் பணியை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் விவரங்கள் வெளியாகியுள்ளன. காற்றை மாசுபடுத்துவதில், பி.எம்., 10 மற்றும் பி.எம்., 2.5 ஆகிய துகள்கள் முக்கியமானவை. கண்களுக்கு புலப்படாத இத்துகள்கள், சுவாசம் வழியாக மனித உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

இரவு நேரத்தில் பட்டாசு வெடித்ததால், மாசு அதிகரித்தது. நேற்று காலையிலும் இம்மையத்தில் காற்றின் தரம், 270 என்ற தரக்குறியீட்டுடன், மோசம் என்ற நிலையிலேயே இருந்தது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடித்ததால் ஏற்படும் காற்று மாசு குறித்து கோவையில் இரண்டு இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அளவீடானது செய்யப்பட்டது.
இதில் கவுண்டம்பாளையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் இந்த அளவீடு செய்யும் பணியானது நடத்தப்பட்டது. இதில் கவுண்டம்பாளையம் பகுதியில் மாசு அளவு 187 ஆகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசு அளவு 197 ஆகவும் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சம் 200 க்கு மேலாக இருக்கும் காற்றின் அளவு மோசமானது என இருக்கும் நிலையில், கோவையை பொறுத்தவரை மாசு அளவு அபாயகரமாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல கோவை மாவட்டத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மட்டும் மொத்தம் 35 கோடி அளவிற்கு மது விற்பனை நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தவிர பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக 16 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களின் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.