- நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளே கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம். உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரனைக்கு எடுத்தது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கட்டிடம் சீரமைக்க படுமா? அல்லது இடித்து புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்படுமா? என்பது குறித்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தில் உள்ள கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து இதில் கணினிகள சேதம் அடைந்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தில் இன்று காலை திடீரென மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகள் கணினி மீது விழுந்ததில் கணினி சேதமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் காயமின்றி தப்பினர்.
இந்த விவகாரம் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியானது இதனை பார்த்த நீதிபதிகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
அப்பொழுது நீதிபதிகள் அதிக நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடத்தில் இதுபோன்று மேற்கூரை இடிந்து எனவே இந்த வாகாரத்தில் தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மதுரை பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார்கள்.
மருத்துவமனையை மேற்கூரை இடிந்து விவாகரத்தில் என்ன நடந்தது அதன் பரப்பளவு என்ன மீட்பு நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது மேலும் கட்டிடத்தின் கால அளவு எப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் அல்லது கட்டிடங்களை இடித்து புது கட்டிடம் அமைக்கப்படுமா என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.