ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முகமது தஸ்தகீர் பள்ளியில் நேற்று முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக் காண அரசு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவிற்க்கு ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் வருவதற்கு முன்னரே நிகழ்ச்சி தொடங்கியது.இதனால் அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கும் நடந்த வாக்குவாதத்தில் சமாதானம் பேசிய ஆட்சியர் தள்ளிவிடப்பட்டார்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை திடீரென ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ் கனியின் அலுவலக உதவியாளர் விஜயராமு என்பவர் ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட போது ஆட்சியர் அருகே இருந்த சோபாவில் விழுந்தார்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் மாவட்ட ஆட்சியருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்து வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் கேணிக்கரை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் நவாஸ் கனி எம்.பி அலுவலக உதவியாளர் விஜயராமு மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.