பெண் காவலரிடம் கைவரிசை காட்டிய ஆண் காவலர்.! கல்யாணம் என்றவுடன் ஓட்டம்.!

0
272
அஜித்

 சென்னையில் ஆயுதப்படைப்பிரிவில் இரு காவலர்கள் ஒன்றாக வேலை செய்து வந்த நிலையில் , அவர்களுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.

3 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், இந்நிலையில் திருமணம் ஆன இரண்டு நாளிலே மனைவி விட்டு காவலர் தலைமறைவாகி விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

சென்னை ஆயுதப்டையில் காவலராக இருப்பவர் மதுமிதா. இவருடன் திருவாரூரைச் சேர்ந்த அஜித் என்பவரும் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் காவலர்களாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்தநிலையில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்கள் இடையே காதலாக மாறியுள்ளது . அவர்கள் திருமணம் செய்யாமலேயே சென்னையில் ஒரே வீட்டில் மூன்று வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் .

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மதுமிதா கர்ப்பம் அடைந்ததாகவும், ஆனால் திருமணம் செய்ய அஜித் தயங்கியதாகவும் அந்த பெண் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

திருமணத்தை தவிர்த்த அஜித் திருவாரூர் வந்துள்ளார். அங்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை ஆயுதப்படை பெண் காவலர் மதுமிதா புகார் அளித்துள்ளார் . அந்த புகாருக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அன்று மதுமிதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் அஜித் மதுமிதா ஜோடி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்துள்ளார்கள். இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டு நாளில் நண்பர் வீட்டிற்கு போவதாக கூறிவிட்டு அஜித் சென்றுள்ளார்.

ஆனால் அஜித் திரும்பவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவாரூர் சென்ற பெண் காவலர் மதுமிதா, காவலர் அஜித் வீட்டிற்கு முன்பு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன காரணம் என்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் பிரச்சனை குறித்து காவலர் மதுமிதா கூறியுள்ளார். இதுபற்றி திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பெண் காவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட காவலர் மதுமிதா, திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here