ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை வெட்டி கொன்ற முக்கிய குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு

0
42
குண்டு காயம் அடைந்த வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார்

பல்லடம் 4 பேர் படுகொலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி  இரண்டு காலிலும் குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் காலில் குண்டடிப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது தம்பி செந்தில்குமார், தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.  

கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செந்தில்குமார் என்பவரின் தோட்டத்திற்கு அருகே மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட அவரது குடும்பத்தார் மோகன்ராஜ்,புஷ்பவதி, மற்றும் ரத்தினம்மாள் ஆகிய நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த வெங்கடேஷ் என்கிற ராஜ்குமாரை நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்

இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எடுத்து தருவதற்கு போலீசார் அழைத்துச் செல்லும்போது கள்ள கிணறு அருகே போலீசாரை தாக்கி விட்டு போலீசார் மீது மண்ணு அள்ளி வீசிவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

இந்நிலையில் போலீசார் வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் அவருடைய வலது இடது கால்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது இந்நிலையில் நிலைகுலைந்த வெங்கடேசை பல்லடம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகளை செய்து பின்பு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்த வந்தனர்.

தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்கான பரிந்துரைகள் செய்யப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

4 பேர் படுகொலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி  இரண்டு காலிலும் குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here