கோகுல்ராஜ் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு…
2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி நடந்த இந்த கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது….
மேலும் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கோகுல்ராஜ் தாயார் சித்ரா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வு….
கோகுல்ராஜ் கொலை வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்ததாலும் திருச்செங்கோடு சிவன் கோவிலின் மேல் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் 10 பேர் மட்டுமே கோகுல்ராஜை இழுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்ததால் யுவராஜ் உட்பட 10 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அதில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது அதனை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு சற்று முன் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது…..