சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சுண்ணாம்பு கல் எடுத்தாதாக 4 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி, கள்ளன்குறிச்சி, கருப்பூர் சேனாபதி கிராமம், ஆலந்துறையார் கட்டளை ஆகிய கிராமங்களில் செட்டிநாடு சிமென்ட், கருப்பூர் சேனாபதி நிறுவனம், கிரைசண்ட் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் சுண்ணாம்பு கல் எடுத்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி அந்நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இந்த மனுக்களில், 5 ஹெக்டேர் பரப்புக்கு குறைவான நிலத்தில் குவாரி செய்வதாக இருந்தால் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற தேவையில்லை என்றும் , தங்கள் நிறுவனங்கள் 5 ஹெக்டேருக்கு குறைவான நிலத்தில் தான் குவாரி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி,5 ஹெக்டேர் பரப்பிற்கு குறைவான நிலத்தில் குவாரி நடவடிக்கைகளுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற தேவையில்லை என்ற மனுதாரர்களின் வாதம் தவறானது.

 

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/councilors-who-boycotted-the-manimuthar-municipal-council-meeting-not-a-single-one-participated/

உச்ச நீதிமன்றம், பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பட்டிருப்பதால் இந்த வழக்குகளை ரத்து செய்ய கூடாது என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் நிறுவனங்கள், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளையும், அறிவிப்பாணைகளையும்,மீறி உள்ளன என்பது புகாரில் தெரியவந்துள்ளது.

நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்படி தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால், இந்த வழக்குகளை ரத்து செய்ய முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review