சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் போது, பல தரப்பினரும் அவருக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று விட்ட அவர், மற்ற வழக்குகளிலும் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவின் முழு ஆவணங்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு காயம் ஏற்படுத்த சிறைத் துறையினருக்கு எந்த காரணமும் இல்லை எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைததிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.