கல்வராயன் மலைப் பகுதி சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
ஐகோர்ட்டு

 

- Advertisement -
Ad imageAd image

கல்வராயன் மலைப் பகுதியில் செய்யப்பட்டுள்ள சாலை வசதிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக , பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ் மணி ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதற்கு தேவையான சாலை வசதிகள் இல்லை என விழுப்புரம் கோட்ட மேலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/tobacco-products-including-cool-lip-gutka-have-been-banned-in-their-states/

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்வராயன் மலைப்பகுதியில் முழுமையாக இல்லாவிட்டாலும் 95சதவீதம் சாலை வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையடுத்து, கல்வராயன் மலை கிராமங்களில் வாகன போக்குவரத்துக்கு உகந்த வகையில் சாலை வசதிகள் உள்ளதா என வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

Share This Article
Leave a review