- கடலூரில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் 52 பேருக்கு உதவியாளர், கள உதவியாளர் பணியில் நிரந்தரமாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், 2020ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தங்களுக்கு உதவியாளராகவும், கள உதவியாளராகவும் நிரந்தர பணி வழங்க உத்தரவிடக் கோரி, கடலுார் மாவட்ட மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஜெகநாதன் உள்ளிட்ட 52 பேர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியில், மனுதாரர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால்,

மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து, உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.