தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, பஞ்சாயத்து தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, பஞ்சாயத்து தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சோமயம்பாளையம், மலுமிச்சம்பட்டி, சிக்கடசம்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த உத்தரவுகளை எதிர்த்து, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம பஞ்சாயத்துக்களில் பணிகளை நிறைவேற்றும் வகையில் காசோலைகளில் கையெழுத்திட தலைவரோ, துணைத்தலைவரோ மறுக்கும்பட்சத்தில், திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரமுள்ளது என தெரிவித்துள்ளது.

அதேசமயம், தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது என, நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்குகளில், கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் விளக்கம் கேட்காமல், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிதாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதியளித்த நீதிபதிகள், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிப்பதற்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சூழல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a review