சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த  உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த  உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

போதைப் பொருளை கடத்தல் வழக்கில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்-கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி கைது செய்தனர்.

இது தொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ்  அமலாக்கத் துறையும், வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தில் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் வழங்கப்பட்ட சிறை மாற்ற உத்தரவின் அடிப்படையில் தன்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தது சட்டவிரோதம் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி,
ஜாமீனில் விடுதலையான நபரை சட்டவிரோதமாக சிறையில் வைத்து நீதிமன்றக் காவலில் அடைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதோடு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறினார்.

அமலாகக்த்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஜாமின் வழங்கப்பட்டு பிறகும் வெளியே விடாமல் சிறையில் வைத்திருந்ததற்காக வேண்டுமானால் திஹார் சிறை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் கோரிலாம் ஆனால் சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என கூறினார்.

ஜாமீன் வழங்கிய பின்னர் வெளியில் விடாமல் சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என கருத்து தெரிவித்த  நீதிபதிகள் அதற்காக தனியாக நிவாரணம் கோரலாம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை
ரத்து செய்யக்கோரி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a review