வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் வரும் தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம்..

2 Min Read
  • வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் வரும் தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மாதம் தை 2 ம் தேதியை திருவள்ளுவர் தினமாகவும், அன்றைய தினம் விடுமுறை நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது

- Advertisement -
Ad imageAd image

இதை செல்லாது என அறிவித்து, திருவள்ளுவர் பிறந்த தினத்தை வைகாசி மாதம் அனுசம் நட்சத்திர தினத்தில் கொண்டாட உத்தரவிடக் கோரி திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சாமி தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், சென்னை பச்சையப்பா கல்லூரியில் கடந்த 1935 ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாள் தொடர்பாக மறைமலையடிகள் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் கலந்துக் கொண்ட கருத்தரங்கு நடத்தப்பட்டது அதில் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக மறைமலை அடிகளார் குறிப்பிட்டதாகவும் அதன் அடிப்படையில் திருவள்ளுவர் திருநாள் கழகம் பச்சையப்பா கல்லூரியில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடிப்படையாக வைத்து 1935 ம் ஆண்டு முதல் தமிழ் நாடு மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் கழகம் திருவள்ளுவர் பிறந்தநாளை வைகாசி மாதம் மே மாதம் 18ம் தேதியே கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் வரும் தேதியை திருவள்ளுவர் பிறந்த தினமாக தமிழ் வளர்ச்சி துறை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வளர்ச்சி துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தை மாதம் 2 ம் தேதியை திருவள்ளுவர் தினமாக மட்டுமே கடைபிடித்து அன்றைய தினம் அரசு விடுமுறையாக கடந்த 1969 ஆண்டு அரசானை பிறபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினம் என கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளதே தவிர திருவள்ளுவர் பிறந்த தினம் இறந்த தினம் என்று கடைபிடிகக்கப்படுவதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே தை 2 ம் தேதி திருவள்ளுவர் தினம் என்ற அரசின் கொள்கை முடிவில் எந்த தவறும் இல்லை என்றும் பொதுமக்கள் யாரும் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவில்லை என்பதால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பத்மா, திருவள்ளுவருக்கு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பான நாளாக வைகாசி மாதம் அனுசம் நட்சத்திர தினத்தை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த ஜாதியில் தான் பிறந்தேன், இந்த நாளில் தான் பிறந்தேன், இந்த நட்சத்திரம் என திருவள்ளுவர் எங்கும் குறிப்பிடவில்லை ,எந்த கடவுளை பற்றியும் குறிப்பிடபடாத போது, வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் தான் திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென எப்படி கேட்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review