சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஒடிசா மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி,
மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே, இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தின் குறுக்கே மேற்கு – வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடா மற்றும் வங்கதேசம் – மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மேலும் வடக்கு ஒடிசா கடற்கரையை ஒட்டி மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும் காற்று 60 கி.மீ வரை வீசக்கூடும்.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளம் – வங்காளதேச கடற்கரைகள் வழியாக மணிக்கு 55-65 கிமீ வேகத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சுந்தர்கர், ஜார்சுகுடா, பர்கர், சமல்பூர், தியோகர், அங்குல், கியோஞ்சர், சோன்பூர், பௌத், பலங்கிர், நுவாபாடா, கலஹண்டி மற்றும் கந்தமால் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
மயூர்பஞ்ச், பால்சூர், தேன்கனல், கட்டாக், நாயக்கர், நபரங்பூர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல ஊர்கள் வெள்ளக்காடாக உள்ளன.
வீடுகள் பெருமளவில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் ஜூலை 8-9 ஆகிய நாட்களில் 153 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது.
நாடு முழுவதும் ஜூலை மாதத்தில் 31.59 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை இயல்படை விட 13% அதிகம் பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.