டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து மது குடிப்போர் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தாராபுரம் அருகே டாஸ்மாக் மதுபான கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து மது குடிப்போர் சங்கத்தின் சார்பில் கடை அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது இதனால் தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள தேர் பாதை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இடமாற்றம் செய்வதை கண்டித்து மீண்டும் டாஸ்மார்க் மதுபான கடை செயல்படும் இடத்திலேயே மதுபான கடை இயங்க வேண்டும் எனக் கூறி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர் பாதை பகுதியில் சுமார் 6 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த பத்தாம் தேதி அன்று பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் தனி வட்டாட்சியர் ஜெகஜோதி திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நவம்பர் பத்தாம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான கடை செயல்படும் இடத்திலிருந்து அகற்றப்படும் என உறுதியளித்தனர் இதனால் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தேர் பாதை பகுதியில் செயல்பட்டு வரும் வணிகர்கள் ஒன்றிணைந்து மதுபான கடையை அகற்றினால் தங்களுக்கு வணிகம் பாதிக்கும் எனக்கூறி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டாம் எனக் கூறி மது பிரியர்கள் கடையின் முன் கூடி தங்களுக்கு தற்போது செயல்படும் இடத்திலேயே மதுபான கடை வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.