திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உலுப்பங்குடி, ஊராளிபட்டி கிராமத்தில் மணிமுத்தாறு பகுதியில் நடைபெறும் சட்ட விரோத மணல் கொள்ளை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளை குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
சட்டவிரோத மணல் கொள்ளைகள் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவளத்துறை அதிகாரிகளும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “திண்டுக்கல் மாவட்டம் உலுப்பங்குடி பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த ஜூலை 11ஆம் தேதி உலுப்பங்குடி கிராமம், இந்த பகுதி முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது இந்நிலையில் இந்த பகுதியில் சில நாட்களாக மணிமுத்தாறு பகுதியில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சட்ட விரோதமாக பல டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர்
சம்பந்தப்பட்ட பகுதிக்கு
நான் சென்று பார்த்தபோது அங்கிருந்தவர் என்னை அங்கிருந்து செல்லுமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேபோல தாடிக்கொம்பு பகுதியில் மண் அள்ளுவதற்கு பெற்ற அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி உலுப்பங்குடியில் உள்ள கருப்பு கோவில் குட்டு பகுதியில் மணல் எடுத்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் இதற்கு கனிம வளத்துறை அதிகாரிகளும் உடனடியாக இருந்து வருகின்றனர்.
ஆகவே திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உலுப்பங்குடி, ஊராளிபட்டி கிராமத்தில் மணிமுத்தாறு பகுதியை ஒட்டி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உலுப்பக்குடி, ஊராளிபட்டி கிராம அரசு புறம்போக்கு நிலங்களில் எடுக்கப்பட்ட மணல் அளவு குறித்து ஆய்வு செய்வதோடு, அதற்கு துணை போன கனிம வளத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மனுதாரர் தளத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் மணல் நல்லுவதற்கான அனைத்து புகைப்பட ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
இதனைப் பார்த்த நீதிபதிகள் இந்த அளவு கனிம வளம் கொள்ளை போகின்றது இதை தடுக்கக்கூடிய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினர் பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆற்று மணல் கொள்ளை குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் அதேபோல கனிமவளத் துறையினரும் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.