வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்கள் விவகாரம் : விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

1 Min Read
  • வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வி.ஐ.பி.க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஃபைல்ஸ் எனக் கூறி, தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

 

இந்த வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான போது, 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைக்குள் ஆஜராகியதால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் என்.மகேந்திரபாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், விஐபி-கள் மற்றும் விவிஐபி-கள் ஆஜராகும் வழக்குகளில், அவர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கும்படி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/a-case-seeking-an-order-to-repair-the-jetty-bridge-at-choliakudi-sea-in-thondi/

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்கின் விசாரணை நடைபெறும்போது குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் வழக்கறிஞர்கள் வர வேண்டும் என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Share This Article

Leave a Reply