- திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ ஆர் நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம்.
மத்திய அரசின் உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணயம் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.சம்மந்தப்பட்ட நிறுவனம் செய்த விதிமீறல் என்ன?- நீதிபதி கேள்வி
கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை.- நீதிபதி.மத்திய உணவு ப்பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா? .- நீதிபதி.
மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது அந்த சோதனையின் முடிவுகள் எங்கே இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை – நீதிபதி.
இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது தற்போது இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.- நீதிபதி எனவே உச்ச நீதிமன்றம் கூறியது போல் அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும்.
மத்திய அரசின் உணவு தர கட்டுபாடு மையம் ஏற்கனவே அனுப்பிய நோட்டீசுகளை தவிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
உரிய கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைப்பு.திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த AR பால் நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு.
திண்டுக்கல்லில் உள்ள AR பால் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் முறையான ஆய்வு செய்த பின்பு திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நிறுவனம் அனுப்பிய நெய் சோதனை செய்தபோது (மாட்டுக் கொழுப்பு) கலப்பிடம் இருப்பதாக கூறி குஜராத்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் நெய் கொள்முதலுக்கு தடை (கருப்பு பட்டியலில்) விதித்தது.இதனைத் தொடர்ந்து ஒன்றிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் எங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முறையாக ஆய்வு செய்யாமல், தனியார் ஆய்வகம் ஆய்வின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஏற்கத்தக்கது அல்ல சட்டவிரோதம் விளக்கம் அளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை
செயல்படுகிறது.
எனவே, ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
ஏ.ஆர் நெய் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒன்றிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தரப்பில் எங்களது உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு 2 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது இதற்கு விளக்கம் தர போதிய கால அவகாசம் வழங்கவில்லை.
மேலும் என்ன விதி முறை மீறலில் நிறுவனம் ஈடுபட்டது என்பது குறித்து குறிப்பிடவில்லை செப்டம்பர் 29ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி அக்டோபர் 2 தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அனுப்பி உள்ளனர்.
இது ஏற்கத்தக்கது அல்ல அதே நேரத்தில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அனுப்பி உள்ள சோதனை அறிக்கையில் (மாட்டு கொழுப்பு கலந்ததாக) கலப்படம் எங்கும் குறிப்பிடவில்லை குஜராத்தில் உள்ள நிறுவனம் அனுப்பிய நோட்டீஸில் முரண்பாடு உள்ளது இதேபோல் சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் சோதனை அறிக்கையில் எந்தவித கலப்படமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே ஒன்றிய அரசின் உணவு தர கட்டுப்பாட்டு நிர்ணயம் ஆணையம் அனுப்பிய நோட்டீஸிற்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அவர்களது நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குஜராத் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது தற்போது கால அவகாசம் இல்லை என்றால் மேலும் உரிய கால அவகாசம் வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
அப்பொழுது நீதிபதி சதீஷ்குமார் ஏ.ஆர் டெய்ரி புட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் எந்த வகை விதிமுறை மீறல் காரணமாக நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நோட்டீஸ்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல் தெளிவின்றி உள்ளது.செப்டம்பர் 29ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் விளக்க அளிக்க கோரினால் எப்படி விளக்க முடியும்.
சம்மந்தப்பட்ட நிறுவனம் செய்த விதிமீறல் குறித்து கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை. உணவுப்பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
====
மேலும் சென்னையில் உள்ள ஆய்வகம் கொடுத்த சோதனை அறிக்கையில் குஜராத் அறிக்கையும் பல்வேறு முரண்பாடு பல்வேறு முரண்பாடுகளையும் உள்ளது சென்னை கிங்ஸ் ஆய்வக அறிக்கையில் கலப்படம் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது அதுவும் அரசு நிறுவனம்தான்.
மேலும் ஒன்றிய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது அந்த சோதனையின் முடிவுகள் எங்கே இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/i-was-behind-the-success-of-actor-vadivelu-actor-singamuthu-has-told-the-madras-high-court/
இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது தற்போது இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது எனவே உச்ச நீதிமன்றம் கூறியது போல் அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும் எனவே ஏற்கனவே அனுப்பிய ஒன்றிய அரசின் நோட்டீசுகளை தவிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும்.
அதற்கு உரிய 14 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும். அந்த உரிய கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.