கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும் மினி பேருந்தில் நடத்துனரை விக்னேஸை வெட்டிய சம்பவம் .

1 Min Read
  • 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும் மினி பேருந்தில் நடத்துனர் விக்னேஸை வெட்டிய சம்பவத்தில் வெட்டிய மோப்ப ஹரிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 2022 ம்ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி இரவு கும்பகோணத்தில் இருந்து எலுமிச்சங்காய் பாளையம் சென்ற மினி பேருந்தில் ஏறிய மோப்ப ஹரி என்பவர் அந்தப் பேருந்தில் நடத்துனர் விக்னேஷ் என்பவரை அரிவாளால் வெட்டினார். வெட்டிய சம்பவம் பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது .
அந்த காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து மோப்பக் ஹரியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா மினி பேருந்து நடத்துனரை அரிவாளால் வெட்டிய மோப்ப ஹரி என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மோப்ப ஹரி மினி பேருந்தில் அந்த பேருந்து நடத்துனர் விக்னேஷ்சை அறிவாளால் தாக்கும் காட்சி அந்த பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சியும் அனுப்ப பட்டுள்ளது.

Share This Article
Leave a review